எங்கள் சகோதரன் ஸ்ரீ தரனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

 எங்கள் சகோதரனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

 ஸ்ரீதர் 


பலரை வாழவைத்து, இறந்தும் இறவாமல் வாழும் எங்கள் சகோதரனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்...

தன் உயிர் நீத்து பலரை வாழ வைத்த எங்கள் சகோதரனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

மூளைச்சாவு அடைந்த பட்டதாரி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகர், அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 24). பி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை அண்ணா நகரில் உள்ள Wiztech Automation Solutions இல் வேலை செய்து வந்தார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு திடீரென தலை வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், ஸ்ரீதரின் மூளையில் பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்த டாக்டர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
மூளைச்சாவு ஆனால் அதற்குள் ஸ்ரீதர், மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.உடல்உறுப்புகள் தானம். மூளைச்சாவு அடைந்த ஸ்ரீதரின் உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சையை டாக்டர்கள் பிச்சைபாலசண்முகம், மீனாட்சி குழுவினர் வெற்றிகரமாக செய்துள்ளனர். மற்றொரு சிறுநீரகம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.



உன் நினைவால் வாழும்...
Wiztech Automation Solutions...
And Your Friends....

1 comment:

Anonymous said...

The Casino of Chance | Online Casino | Bet £10 Get £50
Join 카지노 us for all your latest casino games plus the chance rb88 to win BIG in giveaways, instant cashouts & even roulette plus up to £1000 starvegad FREE BONUS.